SILK SMITHA
2 டிசம்பர் 1960,
விஜயலட்சுமி ஆகிய சில்க் சுமிதா அவர்களுக்கு பிறந்தநாள் :
இளம்பிறை என்ற கவிஞர், சுமிதா அவர்களின் இறப்புக்கு இறுதியஞ்சலி செலுத்தும் விதமாக இரங்கல் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
பிறந்தநாள் அன்று இரங்கல் கவிதையை பதிவிடுவது தவறாக தெரிந்தாலும், இந்த சிறு கவிதையில் சுமிதா அவர்களின் வாழ்கை எவ்வளவு வேதனையான ஒன்று என்பது தெரியவருகிறது. அதனால் இதனைப் பதிவிடுகிறேன்.
கவிஞர் இளம்பிறை அவர்களின் கவிதை:
சில்க் சுமிதா என்கிற விஜயலட்சுமிக்காக...
கேமரா கிறுக்கிப் போட்ட
தூண்டுச் சீட்டா ?
பிடித்துக் காட்டிய
பெண்மை விளம்பரமா?
எழுதத் தவறிய
இனிய காவியம் நீ ...
நடிப்பில் கூட
மனுஷி வேடம்
மறுக்கப்பட்ட நாயகியே...
நீ கவற்சியாகக்
காட்டப்பட்டவள்
கண்களும் ... உதடுகளும்
கசிந்த போதை உன்னுடையதல்ல ...
நீயா மோசம்?
அழுகிறேன் சுமிதா.
உன்னோடு ஆடியவரெல்லாம்
குடும்பம் குழந்தையென
கௌரவப் பிரஜைகளாய்.
நீ மட்டும் ஏன் பெண்ணே
மண்ணோடு?
கண்ணீர் மறைக்க மறைக்க
உன் வாழ்வு மீது நூறு கேள்விகள்.
இப்பவும் உன் பிரதேசத்தைக்
கவர்ச்சியாகப் போட்டுக்
காசாக்க எண்ணாதிருந்தால்
அதுவே நெஞ்சார்ந்த
இறுதி அஞ்சலியாக!
(23.09.1996 இரவு).
இப்படி இந்த கவிதை முடிவடையும்.
மேலும் எனது பதிவுகளை காண:
How to Bet on Sports Toto | Sporting 100
ReplyDeleteTo place a wager on a sporting sporting100 event, a bettor must select a team or player who is the favorite to win the game. In most sports, if one team